இலங்கை நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து விளக்கம்

11.04.2021 09:23:15

இலங்கையில் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) விளக்கமளித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த இராஜதந்திர பிரதிநிதித்துவத்தை வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்து, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கியுள்ளார்.

அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறை, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்ட பல செயற்பாடுகளின் தூதர்களை அமைச்சர் புதுப்பித்துள்ளார் என்று வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு பின்னரான சூழ்நிலையில், இலங்கையில் சுற்றுலாவை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான இலங்கை அரசின் சுகாதார நெறிமுறைகள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டது.

பிரான்சின் தூதர் எரிக் லாவெர்டு (Eric Lavertu), இத்தாலியின் தூதர் ரீட்டா மன்னெல்லா (Rita Mannella), ருமேனியா தூதர் விக்டர் சியுஜ்தியா (Victor Chiujdea) அத்துடன் ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டர்.