ஹிங்குராக்கொடையில் நுண்கடன்களையும் இரத்துச்செய்யக்கோரி மாபெரும் கவன ஈர்ப்பு !

07.04.2021 09:10:18

அனைத்து நுண்கடன்களையும் இரத்துச்செய்யக்கோரி ஹிங்குராக்கொடையில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஒன்றுகூடிய மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் உட்பட பல்வேறு பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

இதன்போது ஹிங்குராக்கொடை பிரதான வீதியூடாக கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்துகள் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நுண்கடனால் தினமும் பெருமளவான பெண்கள் தற்கொலைசெய்துகொள்ளும் நிலைக்கு செல்வதன் காரணமாக நுண்கடன் திட்டத்தினை இரத்துச்செய்யவேண்டும் என இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பெண்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்படட்டன.

நுண்கடன் திட்டத்தினை ரத்துச்செய்யகோரும் வகையிலான பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் அது தொடர்பான கோசங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவாகள் எழுப்பினர்.