புதிய முடக்கநிலையை அறிவித்தது போர்த்துகல்!

14.01.2021 13:36:11

 

அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்த்தொற்று வீதத்திற்கு பதிலளிக்கும் விதமாக போர்த்துகல் அரசாங்கம் நாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் நடைமுறைக்கு வரும் மற்றும் வசந்த காலத்தில் விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே இருக்கும். அத்தியாவசியமற்ற வணிகத்தை நிறுத்தி குடிமக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, ‘விதி தெளிவாக உள்ளது. வீட்டிலேயே இருங்கள்’ என கூறினார்.

இந்த கட்டுப்பாடுகள் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வசந்தகால முடக்கநிலையின் போது போலல்லாமல் பாடசாலைகள் திறந்திருக்கும். உணவு கடைகள் மற்றும் மருந்தகங்கள் திறந்த நிலையில் இருக்க முடியும்.

இருப்பினும் பெரும்பாலான பிற கடைகள் மூடப்பட வேண்டும். டேக்அவே சேவைகளுக்கு உணவகங்கள் மட்டுப்படுத்தப்படும். விதிகளை மீறுவதற்கான அபராதம் இரட்டிப்பாகும்.

ஜனவரி 24ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் குடிமக்கள் வாக்களிக்க அனுமதிக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் போர்த்துகலில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 507,108பேர் பாதிக்கப்பட்டதோடு, 8,236பேர் உயிரிழந்துள்ளனர்.