பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் காலமானார் !

30.04.2021 09:00:00

 பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த கே.வி.ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதேவேளை நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை காலமானார்.

இந்நிலையில் அவரது மரணம் திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உயிரிழந்த  கே.வி.ஆனந்துக்கு    வயது 54.

பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.