விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

08.06.2021 10:53:31

விவசாயிகளிடம் இருந்து விற்கப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவற்றினை கொரோனா சிகிச்சை நிலையங்கள், வைத்தியசாலைகள், இடம்பெயர்ந்தோர் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.