அரசியல் இலாபங்களுக்காக தமிழ் இளைஞர்களை பயன்படுத்தாதீர்: கிழக்கு மாகாண ஆளுநர்

12.01.2021 10:36:16

அரசியல் இலாபங்களுக்காக தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை தியாகம் செய்ய வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தமிழ் அரசியல் வாதிகளை வலியுறுத்தியுள்ளார்.


இன்றைய இளைஞர்கள் வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் மட்டுமே விரும்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களைப் பயன்படுத்துவதைக் கண்டித்த அவர், ஒரு நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆரம்பித்த ஹர்த்தால் குறித்தும் கருத்துக் கூறினார்.

தமிழ் அரசியல் தலைமை இளைஞர்களை தமது சொந்த அரசியல் குறிக்கோள்களுக்காக முரண்பாடுகளை முழு வீச்சான மோதல்களாக மாற்ற வேண்டாம் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.