ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுலாக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் !

07.04.2021 09:46:41

2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

ஈரான், பிரித்தானியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2018 ஆண்டு ஒருதலைப்பட்சமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், வியன்னாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று தெரிவித்துள்ள ஈரானின் தூதுக்குழு அடுத்த கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, கைவிடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை மீளச் செயற்படுத்துவதற்கான விரிவான செயற்றிட்டத்தை நாடுகள் தொடர்ந்தும் விவாதிக்கும் என ஈரானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த அணுசக்தி ஒப்பந்தம் மீண்டும் அமுலுக்கு வரும் என உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன.