பங்களாதேஷ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி ?

25.05.2021 10:13:06

 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.30மணிக்கு டாக்கா மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேராவும் பங்களாதேஷ் அணிக்கு டமீம் இக்பாலும் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

ஆகவே இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும். இல்லையெனில் பங்களாதேஷ் அணி தொடரை வென்றுவிடும். எனவே இப்போட்டியில் இலங்கை அணி, கட்டாய வெற்றியை நோக்கி நகர வேண்டியுள்ளது.