தமிழனின் , விடிவிற்கான பேரணி வெற்றிகரமாக மீன்பாடும் தேன் நாட்டை நோக்கி..

07.02.2023 10:11:00

கட்சி பேதங்கள் இல்லாமல், வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம் எனும் தொனிப்பொருளில் எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழர்களாக ஒன்றிணைந்து இப்பேரணில் கலந்து கொள்ள வேண்டும்.

உணர வேண்டியவர்களை உணர வைக்க தமிழர்களாக ஒன்றிணைந்து, வடக்கையும், கிழக்கையும் இணைத்து மேற்கொண்டுள்ள இப்பேரணியை வெறுமனே பேரணி எனக் கூறாமல் தமிழன் எடுக்கும் பேரணி, இனத்தின் விடுதலைக்காக எடுக்கும் பேரணி, தமிழனுக்கு விடிவு கேட்டு எடுக்கும் பேரணி என்று கூறவேண்டும்.

உரிமை கேட்டு நடக்கின்றோம்

1958 ம் ஆண்டு தந்தை செல்வாவின் தலைமையில் வடக்கும் கிழக்கும் இணைந்து மேற்கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் இறுதி நாளிலே மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவம் புகுந்து அடித்து உதைத்து தமிழனுக்கு செய்த கொடுமைகளையும் எண்ணிப்பார்க்கிறேன்.

இவையெல்லாம் தமிழன் பட்ட அவலமும் அல்ல, தமிழன் பட்ட காயங்களும் அல்ல, தமிழன் தமிழாக வாழ துணிந்து நின்று பெற்ற பரிசுகள் என்று சொல்ல வேண்டும்.

தமிழர் ஒன்றாய்ப் போகின்றோம், தலை நிமிர்ந்து போகின்றோம், மலைகள் போல் தடைவந்தாலும் மலைத்திடாமல் உரிமை கேட்டு நடக்கின்றோம்.

ஆசியுரையுடன், மீன்பாடும் தேன்நாடு மட்டக்களப்பை நோக்கி நகருகின்றது இறுதிநாள் பேரணி.