6 விக்கெட்களால் கொல்கத்தா அணியைவீழ்த்தியது ராஜஸ்தான் !!

25.04.2021 10:37:42

ஐ.பி.எல். தொடரின் 18 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 6 விக்கெட்களால் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிங்க்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ராகுல் திரிபாதி 36 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் கார்த்திக் ஓட்டங்களையும் நிதீஷ் ராணா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்களையும் முஸ்தபிசூர், சாகரியா மற்றும் உனட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து 134 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக 4 விக்கெட்களை வீழ்த்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வீரர் கிறிஸ் மோரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.