முழுமையாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் இயங்க வேணடும் .

16.01.2021 07:55:15

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமை யாகத் துறைமுக அதிகார சபையின் கீழ் இயங்க வேண் டும் என்ற பிரதான கோரிக்கை உள்ளடங்கலாகப் பிரேரணை கோவை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர் பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் அந்த முனையத் திலிருந்து நாட்டிற்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து பிரதான கோரிக்கை உள்ளடங்கலாகப் பிரேரணை கோவை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

குறித்த பிரேரணை கோவை ஒன்றைத் துறைமுக தொழிற் சங்கங்கள் இன்று அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க உள் ளன.

இந்நிலையில், துறைமுக தொழிற்சங்கங்களுக்கும் ஜனா திபதிக்கும் இடையே இது தொடர்பாக அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்தது.

அதன் போது பிரதான கோரிக்கை உள்ளடங்கலாகப் பிரே ரணை கோவை ஒன்றினை உருவாக்கிச் சமர்ப்பிக்குமாறு துறைமுக தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி அறிவு றுத்தியிருந்தார்.

அதன்படி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் 23 தொழிற்ச ங்கங்கள் நேற்று பிற்பகல் ஒன்று கூடி பிரதான கோரிக்கை உள்ளடங்கலாகப் பிரேரணை கோவை ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

குறித்த பிரேரணையை இன்றைய தினம் ஜனாதிபதிக் கும், கொழும்பு துறைமுக விவகாரங்களை ஆராய ஜனா திபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கும் இன்றைய தினம் கையளிக்கவுள்ளனர்.