மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சேலம் வருகை !

21.02.2021 10:13:59

 

பா.ஜனதா இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார்.

தமிழக பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாநில மாநாடு, சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மாநாட்டுக்கு இளைஞர் அணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்குகிறார்.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  மாநில தலைவர் எல்.முருகன், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளர் ரவி, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்விசூர்யா வினோஜ் உட்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் ஊடாக சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வருகிறார். அவருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அதன்பின்னர் அவர், அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகிறார். மாலை 5 மணி அளவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காமலாபுரம் சென்று அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில்  1,500 பொலிஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் அணி மாநாட்டுக்காக தமிழக சட்டசபை கட்டடம் வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பா.ஜனதா தொண்டர்கள் சேலத்துக்கு வந்துள்ளனர்.