எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை

14.01.2021 14:07:33

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறி இருக்கிறார்.

நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாஸ்டர்'. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள். படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்படுபவர் மகேந்திரன். விஜய் சேதுபதி இளம் வயதில் எப்படி சமூக விரோதியாக மாறுகிறார் என்பதே பிளாஷ்பேக்காக வரும்.

இந்நிலையில் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த இடத்தை கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று பதிவு செய்து இருக்கிறார்.