நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கமானது பெப்ரவரியில் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி !

05.03.2021 07:46:13

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கமானது 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கியின் இடைக்கால மதீப்பீடுகளுக்கமைய இந்த வீழ்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கமானது 4.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.கடந்த வருட இறுதியில் வெளிநாட்டு ஒதுக்கமானது 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டு ஒதுக்கத்தை மேம்படுத்தும் ஒரு கட்டமாக, மத்திய வங்கியினால் கடந்த பெப்ரவரி மாதம், 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் பரிமாற்றங்களில் இருந்து பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.