அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

05.06.2021 12:00:19

இந்தியக் கடற்படையில் இதுவரைக்காலமும் இருந்த  ஒரேயொரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சக்ராவின் குத்தகைக் காலம் நிறைவடைந்தமையினால்,மீண்டும் ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு, ரஷ்யாவின் அகுலா 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலை, இந்தியா 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது.

இதன்போது இந்திய கடற்படை 8 ஆயிரத்து 140 டன் எடை கொண்ட குறித்த கப்பலை, ஐ.என்.எஸ். சக்ரா 2 என்ற பெயருடன் இணைத்துக்கொண்டது.

இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாத்தல் மற்றும் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய செயற்பாட்டுக்கு ஐ.என்.எஸ்.சக்ராவை இந்திய கடற்படை பயன்படுத்தியுள்ளது.

ஆனாலும்  தற்போது குத்தகை காலம் நீட்டிக்கப்படாதமையினால், மீண்டும் ரஷ்யாவுக்கே  குறித்த கப்பல் திரும்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.