தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம்

04.04.2021 11:26:22

 

தற்போது சந்தையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் மிகவும் ஆபத்தானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி மார்ச் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நுகர்வோர் விவகார ஆணையத்தால் சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட 55 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் இருப்பதால் இது மனித உடலுக்கு ஒரு தீவிர புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.

இதில் மிக ஆபத்தான அளவில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனத்தை கொண்ட தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் இருந்தன என்று விசாரணையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.