டக்வத் லுயிஸ் முறைப்படி சிட்னி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

14.01.2021 13:47:28

 

பிக் பேஷ் ரி-20 தொடரின் 38ஆவது லீக் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் டக்வத் லுயிஸ் முறைப்படி சிட்னி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் சிட்னி தண்டர் அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் டேனில் சேம்ஸ் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஸ்டீவ் ஓகீப் 3 விக்கெட்டுகளையும் பர்ட், போல் மற்றும் லோயிட் போப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 12.4 ஓவர்களின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழைக் குறுக்கிட்டது.

இதனால் டக்வத் லுயிஸ் முறைப்படி வெற்றியை அறிவிக்க போட்டி நடுவர் தீர்மானித்தார். இதன்படி சிட்னி சிக்ஸர்ஸ் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி சிட்னி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பிலிப்பே 64 ஓட்டங்களையும் டேனில் கிறிஸ்டியன் ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், டேனில் சேம்ஸ் 2 விக்கெட்டுகளையும் நாதன் மெக்ஹென்ரிவ், டன்வீர் சங்கா மற்றும் பென் கட்டிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் ஸ்டீவ் ஓகிப் தெரிவுசெய்யப்பட்டார்.