டெஸ்ட்டின் முதல் விக்கெட்டே ஜாம்பவானை வீழ்த்தி அசத்தல்

15.01.2021 09:06:41

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை முடிந்து அபாயகரமாக ஆடி வந்த ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை அறிமுக தமிழக ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தி, தன் முதல் டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் சற்று முன் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஷார்ட் மிட் ஆனில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.