மீண்டும் திறக்கப்படுகின்றது இலங்கை

14.01.2021 15:53:03

எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு சுற்றுலாப் பயணிகளுக்காக தனது எல்லையை திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதை இன்று கூறினார்.

இலங்கைக்கு வருகை தரும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டை மீண்டும் திறப்பது தொடர்பாக இந்த கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.