துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம்!

31.12.2020 10:31:47

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. ஆண்டு நிறைவுரவுள்ள நிலையில், இந்த தரவரிசைப்பட்டியில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இதில் முதலாவதாக முதல் பத்து இடங்களில் உள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் பெயர் விபரங்களை பார்க்கலாம்.

இந்த பட்டியலில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இரண்டு இடங்கள் முன்னேறி 890 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, 879 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் ஸ்டீவ் ஸ்மித், இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 877 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அவுஸ்ரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேகன் 850 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் 789 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் அஜிங்கியா ரஹானே 784 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர் 777 புள்ளிகளுடன் 1 இடம் பின்தள்ளப்பட்டு 777 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 760 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.

இங்கிலாந்து ஜோ ரூட் 738 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறார். இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு இந்தியாவின் செடீஸ்வர் புஜாரா 728 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில், அவுஸ்ரேலியாவின் பெட் கம்மின்ஸ் 906 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ரோட் 845 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் நெய்ல் வாக்னர் 833 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் நியூஸிலாந்தின் டிம் சவுத்தீ 826 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

அவுஸ்ரேலியாவின் மிட்செல் ஸ்டாக் இரண்டு இடங்கள் முன்னேறி 804 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் காகிஸோ ரபாடா, 794 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் அஸ்வின் இரண்டு இடங்கள் முன்னேறி 793 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹெசில்வுட் மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டு 790 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா 783 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் எண்டர்சன் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 10ஆவது இடத்தில் உள்ளார்.