பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி மற்றும் பியன்கா ஆண்ரெஸ்கு ஆகியோர் பலப்பரீட்சை - மியாமி

02.04.2021 10:53:00

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி மற்றும் பியன்கா ஆண்ரெஸ்கு ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

முதலாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் உக்ரேனின் எலினா ஸ்விடோலினாவும் மோதினர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆஷ்லே பார்டி சிறப்பாக விளையாடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இரண்டாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், கனடாவின் பியன்கா ஆண்ரெஸ்குவும் கிரேக்கத்தின் மரியா சக்கரியும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது.

டை பிரேக் வரை நீண்ட இந்த செட்டில், பியன்கா ஆண்ரெஸ்கு செட்டை 7-6 என போராடிக் கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆண்ரெஸ்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மரியா சக்கரி, களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினார்.