முகக்கவச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அபராதம்?

14.01.2021 13:39:51

பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்ததால் இரண்டு ஒன்றாரியோ முகக்கவச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இருவருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹக்ஸ் ஓவர் மாஸ்க்களால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மற்ற நிகழ்வில் சுமார் 40 பேர் சம்பவ இடத்தில் இருந்தனர். இரண்டு ஆர்ப்பாட்டங்களும் ஜனவரி 3 மற்றும் ஜனவரி 10 ஆகிய திகதிகளில் பே தெரு தெற்கு மற்றும் பிரதான வீதி மேற்கு பகுதியில் நடந்தன.

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை வெளிப்புறக் கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதை ஹமில்டன் பொலிஸார் உறுதிப்படுத்தினர். இதனடிப்படையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.