சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகள் - ரஷ்யா அறிவிப்பு!

01.04.2023 21:00:43

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புதிய வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வருங்காலத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகளாக கூறப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவையும், ரஷ்யாவுடன் நட்பில்லாத நாடுகளையும் தவிர்த்து ரஷ்யக் கூட்டமைப்பை திட்டமிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய கூட்டணி

ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்காவும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பை கண்டித்து பல தடைகளை விதித்துள்ளன.

ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு இந்தியாவும், சீனாவும் எந்தவிதமான தடைகளையும் விதிக்கவில்லை, மாறாக, பேச்சுவார்த்தைகளின் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அந்த நாடுகள் வலியுறுத்தின.

இதன்காரணமாக, ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் முன்னுரிமை அளிக்கப்படுபவதாக சொல்லப்படுகின்றது.