ஜனநாயகம் குறித்து கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்து ஜனாதிபதி ஜோபைடன் இலங்கைக்கு எடுத்துரைத்துள்ளது.

12.04.2021 09:29:51

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஜனநாயகம் குறித்து கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்து அமெரிக்கா இலங்கைக்கு எடுத்துரைத்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிற்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போது இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் கொவக்சிற்கான அமெரிக்காவின் பங்களிப்பு ஜனநாயகம் குறித்த ஜோபைடனின் அர்ப்பணிப்பு உட்பட பல விடயங்கள் குறித்து தூதுவரும் வெளிவிவகார அமைச்சரும் ஆராய்ந்தனர் என தூதுரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்