பயிர் காப்பீட்டு திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் - மோடி பெருமிதம்

14.01.2021 10:55:32

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க தொடங்கப்பட்ட முக்கிய முயற்சியான ‘பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்’ 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த திட்டம், பயனாளிகளை அதிகரித்துள்ளது, அபாய காரணிகளை தணித்துள்ளது. இதில் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பயிர் காப்பீட்டு திட்டம், எப்படி பயனுள்ளதாக இருக்கிறது, இழப்பீடு அளிப்பதில் எவ்வளவு வெளிப்படையாக செயல்படுகிறது என்பதை ‘நமோ’ செயலியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.