இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான செவிலியர்கள் இன்று வாக்களிப்பு!

28.03.2023 23:21:22

அரசாங்கத்தின் தேசிய சுகாதாரச் சேவையின் ஊதியச் சலுகையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து, இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 280,000 செவிலியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாக்களிக்கவுள்ளனர்.

 

டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ஆறு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, பெப்ரவரி பிற்பகுதியிலும் மார்ச் தொடக்கத்திலும் மற்ற தொழிற்சங்கங்களுடன் ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் மற்றும் சுகாதார அமைச்சர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து மார்ச் 16ஆம் திகதி அரசு ஊதியம் வழங்கியது. ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் அதன் உறுப்பினர்களை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள பரிந்துரைக்கிறது.

மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஒப்பந்தங்களில் பணிபுரியும் காலேஜ் ஆஃப் நர்சிங் உறுப்பினர்கள் மட்டுமே மார்ச் 28 முதல் ஏப்ரல் 14ஆம் திகதி வரை வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள்.

மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் பெரும்பாலான மூத்த மேலாளர்கள் தவிர, அனைத்து தேசிய சுகாதாரச் சேவையின் ஊழியர்களுக்கும் ‘மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல்’ என்பது தேசிய ஊதிய அமைப்பாகும்.