கால்பந்துபோட்டி வரலாற்றில் முதல்முறையாக களம் இறங்கும் பெண்!

01.12.2022 18:13:51

 உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன் முறையாக பெண் நடுவர்கள் பங்கேற்க உள்ளனர் கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அல்பேட் மைதானத்தில் ஜெர்மனி- கோஸ்டாரிகா அணிகள் மோதும் போட்டியில் முதன்முறையாக பெண் நடுவர் பங்கேற்க உள்ளார்.

இந்த பெருமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 38 வயதான ஸ்டெபானி ப்ராபர்ட் ( Stephanie Frappart) பெற்றுள்ளார். இவருக்கு துணையாக, பிரேசிலை சேர்ந்த (newsa back ) நியூசாபேக் மற்றும் மெக்சிகோவை சேர்ந்த (karen dias medina)கரேன் தியாஸ் மெடினா ஆகிய பெண்களும் பணியாற்ற உள்ளனர்.

இந்த தகவலை , உலகக்கால்பந்து போட்டிகளுக்கான நடுவர்களின் தலைவர் பியர்ளுகி கொலினா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.