இந்தியாவிற்கு உதவி செய்யும் சர்வதேச நாடுகள் !

30.04.2021 09:35:56

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன.

அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய நாடுகள் அனுப்பிவைத்துள்ள மருத்துவ உதவி பொருட்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன.

இதன்படி 120 ஒக்சிஜன் செறிவூட்டும் சாதனங்கள், வெண்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உதவி பொருட்களுடன் பிரித்தானிய  விமானம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவை வந்தடைந்துள்ளது.

குறித்த மருத்துவ பொருட்கள் டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதுவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஸ்புட்னிக் தடுப்பூசி டோஸ்களும் இந்தியாவிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஸ்புடனிக் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் வாய்ப்பையும் ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரோமானியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பல்வேறு நாடுகளும் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த தேவையான உதவி பொருட்களை அனுப்பிவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.