அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

01.03.2023 15:28:57

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியதாவது , தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" ."உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களைத்தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் தமிழகத்திந் சிறப்பான திட்டங்கள் என தெரிவித்துள்ளார்