மீண்டும் சர்வதேச எல்லைகளை திறக்க முடிவு செய்யவில்லை – அவுஸ்ரேலிய பிரதமர்

18.04.2021 11:02:56

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்யவில்லை என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளர்.

தொற்று பரவல் அதிகமானதை அடுத்து 2020 ஆம் ஆண்டு சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சமீபத்திய மாதங்களில் வரையறுக்கப்பட்ட சர்வதேச வருகையை மட்டுமே அனுமதித்து வருகிறது.

எல்லையை முடியமை, சுகாதார விதிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக உலகளவில் கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளில் அவுரேலியாவும் ஒன்றாக காணப்படுகின்றது.

அங்கு இதுவரை 29,500 க்கும் குறைவான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை 910 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.