ரஹ்மான் ரொம்ப பிசி

11.01.2021 11:43:25

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடிகர் ரஹ்மான், பிசியாக நடித்து வருகிறாராம்.

2021-ம் ஆண்டு, நடிகர் ரஹ்மானுக்கு உற்சாகமான வருடம் என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளதாம். தற்போது ஐதராபாத்தில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார். 

இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அஹமத் இயக்கத்தில் அர்ஜுன், 'ஜெயம்' ரவி ஆகியோருடன் இணைந்த படமான 'ஜன கன மன', விஷாலுடன் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 

தமிழ், தெலுங்கில் பிசியாக உள்ள ரஹ்மான் மலையாளத்தில் புதுமுக இயக்குனர் சார்ல்ஸ் ஜோசபின் 'சமரா' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் காஷ்மீரில் ஆரம்பமாகிறது. 2021 ரஹ்மானுக்கு பிசியான ஆண்டாக அமைகிறது.