யாழில் கறுவா உற்பத்தி !

06.06.2021 10:22:04

 

மலைநாடுகளில் உற்பத்தியாகும் பயிரினங்களை யாழிலும் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சாதித்துக் காட்டியுள்ளார்.

இலங்கையின் ஏற்றுமதி பொருட்களில் முக்கிய இடத்தினை வகிக்கும் கறுவாவினையே யாழிலும் குறித்த விவசாயி விளைவித்துக்காட்டியுள்ளார்.

மிக நீண்ட போராட்டம், முயற்சி மற்றும் பொறுமைக்கு கிடைத்த பயனாக தென்னிலங்கை விவசாயிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைந்திருக்கிறது.