மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் – கேரள அரசு கோரிக்கை !

02.06.2021 10:05:56

கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் கொண்டுவந்த குறித்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ‘பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திலும் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.