இந்தியா அணிக்கு 406 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸி..!

10.01.2021 10:16:35

 

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்ரேலியா அணி 312 பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டுள்ளது.

சிட்னி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக கேமரூன் கிரீன் 84 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 81 ஓட்டங்களையும் மார்னஸ் லாபுசாக்னே 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அஷ்வின் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 94 ஓட்டங்கள் பின்தங்கி இருந்த இந்திய அணிக்கு தற்போது வெற்றி இலக்காக 406 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.