இன்று உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகிறது !

04.05.2021 10:30:54

2020ஆம் அண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஓகஸ்டில் உயர்தரப் பரீட்சை இடம்பெறவிருந்த நிலையில் கொரோளா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் ஆறாம் திகதி வரை நடைபெற்றது.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 62ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.