பிரபல நடிகை விஷாலுக்கு ஜோடி !

02.05.2021 11:26:12

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா. அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளார் விஷால். அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 

இதையடுத்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் அவருடன் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தை இயக்குகிறார். அடங்க மறு போலவே ஆக்ஷன் அதிரடியுடன் இந்தப் படம் உருவாக உள்ளது.