பிரபல குணச்சித்திர நடிகர் செல்லதுரை மரணம்

30.04.2021 09:48:08

விஜய்யின் கத்தி, தெறி, தனுஷின் மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர நடிகர் செல்லதுரை நேற்று காலமானார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ஹிப்ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் செல்லதுரை. சென்னையில் வசித்து வந்த இவர், நேற்று மாலை காலமானார். இவருக்கு வயது 84. நடிகர் செல்லதுரை மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த மாதம் மட்டும் தமிழ் திரையுலகை சேர்ந்த நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 17-ம் தேதி விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார், நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். நேற்று (ஏப்ரல் 29) குணச்சித்திர நடிகர் செல்லதுரை உடல்நலக்குறைவால் காலமானார். இன்று (ஏப்ரல் 30) இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.