தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் !

18.04.2021 10:48:50

தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறும் அந்தக் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், மாநிலங்களே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்தக் கடிதத்தில் தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.