இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மறுப்பு தெரிவித்து வெளியிடப்பட்ட பதிலடி !

30.05.2021 12:21:42

அரசாங்கங்களுக்கும், உலகசுகாதார நிறுவனங்களுக்கும் மட்டுமே தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனம் கடிதம் மூலம் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் மூலம் உரிய பதிலடியை வழங்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனம் அனுப்பி வைத்துள்ள பதில் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசாங்கமானது தனியார் துறைக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வழங்குமாறு பரிந்துரைத்து அணுகுமுறைகளைச் செய்துள்ளது. இதனையடுத்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனமானது இலங்கை அரசாங்கத்திற்கு உரிய பதிலடியை வழங்கியுள்ளது.

அரசாங்கங்களுக்கும், உலகசுகாதார நிறுவனங்களுக்கும் மட்டுமே தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனம் கடிதம் மூலம் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனத்தின் பதிலளிப்பால் இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். இத்தனை நெருக்கடியிலும் தம்முறை சகபாடிகள் உள்ள தனியார் துறையை மையப்படுத்தி அரசாங்கம் செயற்பட முனைவதானது மிக மோசமான செயற்பாடாகும் என்றார்.

முன்னதாக அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி நிறுவனம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தம்மால் தனியார் துறைக்கு தடுப்பூசிகளை வழங்க முடியாது என்றும், யுனிசெப், கோவெக்ஸ் தடுப்பூசித் திட்டம் மற்றும் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் சேரம் நிறுவனம் ஆகியவற்றினூடாக மட்டுமே இலங்கைக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அஸ்ட்ராசெனெகா நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.