ஏன் ஆயுதம் ஏந்தி விடுதலை புலிகள் போராடினர் ! அமெரிக்காவுக்கு ஸ்ரீலங்கா கடிதம்

05.06.2021 12:18:46

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெப்ராரொஸ் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை கைவிட வேண்டும் என ஸ்ரீலங்கா கேட்டுக்கொண்டுள்ளது என தென்னிலங்கை ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடிதம் ஒன்றின் ஊடாக அமெரிக்காவிற்கான ஸ்ரீலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அந்நதக் கதெத்தில்,

இலங்கைக்கு எதிரான துல்லியமற்ற பக்கச்சார்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய தீர்மானத்தை ஸ்ரீலங்கா எதிர்ப்பதாகவும் தீர்மானத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் உள்ளது. 

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை விரிவாக ஆராய்ந்து ஸ்ரீலங்கா தூதுவர் தனது கடிதத்தில் ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.

1997 இல் அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட 2008 இல் எவ்பிஐ உலகின் மிகவும் ஆபத்தான  பயங்கரமான அமைப்பு என குறிப்பிட்ட  விடுதலைப்புலிகள் அமைப்பை, ஆயுதமேந்திய சுதந்திரத்திற்கான அமைப்பு என தீர்மானம் குறிப்பிடுவது தீர்மானத்தின் நோக்கத்தை புலப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தீர்மானம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இயல்பையே கேள்விக்குள்ளாக்குகின்றது தமிழர்களின் தாயகப்பபூமி குறித்து தெரிவிக்கின்றது எனவும் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.