யாழ்பல்கலைகழக துணைவேந்தரே அதனை அகற்ற தீர்மானித்தார்...!!!

09.01.2021 17:34:21

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள பல்கலை மானியங்கள் ஆணைகுழு நினைவுத்தூபி நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக காணப்பட்டது என தெரிவித்துள்ளது
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.


2018இல் உருவாக்கப்பட்ட நினைவுத்தூபி பின்னர் மெருகூட்டப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்பல்கலைகழக துணைவேந்தர் நினைவுத்தூபியை அகற்றுவதற்கு நேற்றிரவு தீர்மானித்தார் என சம்பத் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்பல்கலைகழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களமாணவர்கள் கல்விகற்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் வடபகுதியை சேர்ந்த பல்கலைகழக மாணவர்கள் தெற்கில் கல்விகற்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படவில்லை என்பதே முக்கியமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியம் நிலவுவதை உறுதி செய்ய அதிகாரிகள் விரும்புகின்றனர் நாட்டிற்கு யுத்தநினைவுச்சின்னங்கள் அவசியமில்லை சமாதான நினைவுச்சின்னங்களே அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.