வைத்தியசாலையில் அசாத் சாலி அனுமதி

19.05.2021 10:57:26

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, மாரடைப்பு காரணமாக தேசிய வைத்தியசாலையில் நேற்று இரவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாரடைப்பு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.