6 மில்லியன் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

06.04.2021 08:19:10

 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மேலும் 6 மில்லியன் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ரஷ்யாவிடமிருந்து 7 மில்லியன் ஸ்புட்னிக் V  கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.