பல முன்னணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியில் நீக்கம் ?

29.04.2021 11:40:27

 

எதிர்வரும் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர்களிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் பல முன்னணி வீரர்கள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கட் தொடர்களுக்கான இலங்கை அணியிலிருந்து திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் நீக்கப்படுவார்கள் என கூறப்படுகின்றது.

குறித்த வீரர்கள் பலரை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கட் தேர்வாளர்கள் பரிசீலித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து ஓரிரு நாட்களில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி அடுத்த மாதத்தில் பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் சர்வதேசத் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின்னர் எதிர்வரும் ஜுன் மாதத்தில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது.