14ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது ஜூவெண்டஸ் அணி !

20.05.2021 09:47:45

 

ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படும் கோபா இத்தாலியா கால்பந்து தொடரின், நடப்பு ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை ஜூவெண்டஸ் அணி வென்றுள்ளது.

சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் அட்லாண்டா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் ஜூவெண்டஸ் அணி சார்பில், தேஜன் குலுசெவ்ஸ்கி போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் ஃபெடரிகோ சிசா 73ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் என இரண்டு கோல்கள் அடித்தனர்.

அட்லாண்டா அணி சார்பில், ருஸ்லான் மாலினோவ்ஸ்கி போட்டியின் 41ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

கோபா இத்தாலியா கால்பந்து தொடரில், ஜூவெண்டஸ் அணி அதிகப்பட்சமாக 14முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது.