இல. சிங்களப் பேரினவாத ஆட்சியில், வறுமை தலைவிரித்தாடுகின்றது !

16.04.2021 10:49:52

இலங்கையில் சிங்களப் பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் - சிங்களப் புத்தாண்டு பிறந்துள்ளது. நாட்டில் தற்போது வறுமையும் சூழ்ந்து கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.