ஸினெடின் ஸிடைன் - ரியல் மட்ரிட் கால்பந்து கழக அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா!

29.05.2021 09:58:39

புகழ்பூத்த ஸ்பெயினின் ரியல் மட்ரிட் கால்பந்து கழக அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஸினெடின் ஸிடைன் துறந்துள்ளார்.

அவரது பயிற்சியாளர் ஒப்பந்த காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருந்த நிலையில் அதற்கு முன்பாகவே பதவியிலிருந்து விலகியுள்ளார்.

2016-18ஆம் ஆண்டு வரை ரியல் மட்ரிட்டின் பயிற்சியாளராக இருந்த 48 வயதான ஸிடைன் அதன் பிறகு அந்த பதவியில் இருந்து விலகினார். அப்போது அவரது பயிற்சி காலத்தில் ரியல் மட்ரிட் அணி கழகத்துக்கான உலகக்கிண்ண, சுப்பர் கிண்ணம் உட்பட 9 சம்பியன் பட்டங்களை வென்றது.

இதன்பிறகு ரியல் மட்ரிட் அணி, ரொனால்டோ உள்ளிட்ட பிரபல வீரர்களின் விலகலால் தடுமாற்றத்தை சந்தித்த காலகட்டமான 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.

ஆனால் இம்முறை நடப்பு லா லிகா கால்பந்து தொடரில், நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய ரியல் மட்ரிட் அணி, இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. அத்துடன் ந்த ஆண்டுக்கான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் அணி அரையிறுதியுடன் வெளியேறியது.

இந்த தொடர்ச்சியான தோல்விகளால் அவர் தற்போது தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்தநிலையில் இதுதொடர்பாக கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஸிடைனின் முடிவை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் அவரது தொழில்முறை பயிற்சி பணி, அர்ப்பணிப்பு, ஆர்வம் எல்லாவற்றுக்கும் நன்றி கடன்பட்டுள்ளோம்.