நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம்

19.03.2023 15:16:00

நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல்  நடக்கலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.