பதவியிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்த வாஸ் விலகல்!

23.02.2021 07:27:44

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடருக்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சமிந்த வாஸ், அப்பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட்டில் தான் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக பதிலளித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு அணி பயணிப்பதற்கு முன்னர் சமிந்த வாஸ் பொறுப்பற்ற முறையில் ஊதிய உயர்வு கேட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து சமிந்த வாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நான் எஸ்.எல்.சி.க்கு ஒரு தாழ்மையான கோரிக்கையை விடுத்தேன், அவர்கள் அதை நிராகரித்தனர். இந்த நேரத்தில் நான் சொல்லக்கூடியது அவ்வளவுதான். நீதி மேலோங்கும்! என பதிவிட்டுள்ளார்.