மக்களின் வாழ்க்கை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது

15.05.2021 11:29:29

அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் கொரோனவை கட்டுப்படுத்த சிறந்த திட்டமிடல் இல்லாததால் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து இல்லாததால் கடும் இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில் நாளாந்த ஊதியம் பெறும் குடும்பங்களும் பல இன்னல்களை சந்திப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

5,000 ரூபாய் கொடுப்பனவு மே மாத சம்பளம் வழங்கப்படும் வரை அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் ,மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.